USelections 2020: தொடர்ந்து எச்சரிக்கும் ட்விட்டர்.. கண்டுகொள்ளாத டிரம்ப்! மீண்டும் சர்ச்சையான பதிவு!
“தேர்தலில் நான் வெற்றிபெற்றுள்ளேன்” என முன்னாள் அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளது, அமெரிக்க அரசியலில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார். அதனைதொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஜோ பைடன், அடுத்தாண்டு ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி தனது அதிபர் பதவியேற்க உள்ளார்.
இந்த தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அதிபர் டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். மேலும் நேற்று அவரின் ட்விட்டர் பதிவில், ஜோ பிடன் பெற்ற வெற்றி, முறைகேடாக நடத்தப்பட்ட தேர்தல் மூலம் கிடைத்தாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவின்மூலம் ஜோ பைடனின் வெற்றியை டிரம்ப் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. அந்த பதிவு, ட்விட்டர் விதிமுறைகளுக்கு எதிரானதாக ட்விட்டர் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
He only won in the eyes of the FAKE NEWS MEDIA. I concede NOTHING! We have a long way to go. This was a RIGGED ELECTION!
— Donald J. Trump (@realDonaldTrump) November 15, 2020
அதுமட்டுமின்றி, இன்று டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் “தேர்தலில் நான் வெற்றிபெற்றுள்ளேன்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, மீண்டும் சர்ச்சையாக, இதன் மூலம் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது. மேலும், இந்த பதிவும் ட்விட்டர் விதிமுறைகளுக்கு எதிராக இருக்கின்றது. முன்னாள் அதிபர் டிரம்ப், ட்விட்டர் விதிமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
I WON THE ELECTION!
— Donald J. Trump (@realDonaldTrump) November 16, 2020