“தமிழகத்தில் கனமழை எதிரொலி பழைய கட்டிடங்களில் தங்க வேண்டாம்”- பேரிடர் மேலாண்மை துறை

Default Image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதை அடுத்து பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

12 மாவட்டங்களில் கனமழை:

தற்போது, குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு:

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது

மேலும், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம், அவ்வாறு பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதே நேரத்தில், இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால், குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது. மரத்தின் அடியில் நிற்க கூடாது, திறந்தவெளியில் இருக்கக் கூடாது நீர்நிலைகளில் குளிக்க கூடாது என தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
rain update news today
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)