இன்று நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியேற்கிறார்..!
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்ற நிலையில் , நிதிஷ் குமார் இன்று முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
243 தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்கள் தேவை. 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதைத்தொடர்ந்து, பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.நிதிஷ்குமார் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 7-வது முறையாகவும், ஏற்கனவே 3 முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாகவும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் இதனால் நேற்று நிதிஷ் குமார் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.இந்நிலையில் இன்று நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியேற்கிறார்.