மக்களை அச்சுறுத்தும் கரடி! கரடியை துரத்த ஓநாய் ரோபோக்கள்!

ஜப்பான் நாட்டின் ஹொகாய்தா தீவில் இருக்கிறது  தகிக்காவா நகரம். இந்த வனத்தை ஒட்டிய நகரில் கரடிகளின் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டில் அந்த தீவில் கரடிகளின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கரடி தாக்கி இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே இதனை தடுப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இதனையடுத்து கரடிகளுக்கு புகுவதை தடுக்க ஒரு முயற்சியாக ராட்சச ஓநாய்களை பயன்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது.

இந்த ஓநாய், நான்கு கால்கள், கொடூரமான கண்கள், கூரிய பற்கள் என அச்சு அசல் ஓநாய் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் ஊருக்கு வெளியே  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்த ஓநாய், கரடியை கண்டதும், அடையாளம் கண்டு ஒலி எழுப்பும். அதைக் கேட்டு பயந்து, கரடி ஓடி விடும் என ஜப்பான் அரசு நிர்வாகம் நம்புகிறது. மேலும் ஓநாயின் சத்தம் கேட்டு, உள்ளூர் மக்களும் சுதாரித்துக் கொள்ள வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த முயற்சியால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

author avatar
murugan

Leave a Comment