விஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை கஸ்தூரி!
தமிழ் சினிமாவில் ஒரு சிலரே மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்கள். அந்த வகையில் சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் தன் கருத்தை தைரியமாக கூறுபவர் கஸ்தூரி.
இவர் டுவிட்டரில் எப்போதும் ஹாட் டாக் தான், எது சொன்னாலும் ட்ரெண்ட் செய்து விடுவார்கள், அந்த வகையில் சமீபத்தில் விஜய், அஜித் குறித்து ஒரு ரசிகர் இவரிடம் கேட்டுள்ளனர்.
இதில் குறிப்பாக விஜய், அஜித்தின் பாசிட்டிவ், நெகட்டிவ் என்ன என்று கேட்டுள்ளனர், அதற்கு அவர் ‘அஜித் ஹாண்ட்சம், நேர்மையானவர், லாயன் பேன்ஸ் உடையவர்’ என்று குறிப்பிட்டு மைனஸில் ‘ஒரே கதை, ஒரே மாதிரியான படம், ஒரே இயக்குனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விஜய் குறித்து ‘விஜய் சூப்பர் டான்ஸர், என்றும் இளமை, வெறித்தனமான ரசிகர்கள்’ என்று கூறிவிட்டு மைனஸிலும் ‘அவருடைய வெறித்தனமான ரசிகர்கள்’ தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீப காலமாக விஜய் ரசிகர்கள் சில பிரபலங்களிடம் தவறாக பேசி சர்ச்சையில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.