சிறப்பான சித்திரை வருகுது…! சிறப்பை பெருக்குவது எப்படி..?

Default Image

சிறப்பான வாழ்வு தரும் சித்திரை….!

உலகத்தன் இயக்கம் ஒன்பது கோள்களை கொண்டே இயங்குகிறது அந்த நவகோள்களில் தலைமை கோளாக இருப்பவர் சூரியன் சித்திரை மாதத்தில் தான் ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் உதயமாகிறார்

அதை தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியாக பயணித்து,பங்குனி மாதத்தில் 12 ராசியான மீனத்தில் சஞ்சாரம் செய்வார் ஒவ்வொரு ஆண்டும் இதே சுழற்சியே இருக்கும் சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் சஞ்சரிப்பதையே “சித்திரை வருடப்பிறப்பு” என்கின்றனர் தமிழக மக்களின் பண்டிகைகளில் முக்கியமானது

அதற்கு முதல் நாளான பிரதோஷம் அன்று விரதம் இருந்து, சிவனையும்,பார்வதி தேவியையும் நந்தி பகவனையும் வழிபாடு செய்து வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். விரத நாளன்று அதன் மகிமையைச் சொல்லும் (சிவன் அருளப் பெற்ற) திருக்கதையைப் படிப்பது விசேஷம். இதனால் நம் பாவச்சுமைகள் குறையும் என்பது ஐதீகம்.

சித்திரை வருடப்பிறப்பாக விளம்பி வருடம் காலை 8.13 மணிக்கு பிறக்கிறது சூரியன் நவகிரகங்களின் தலைமை கோளாகவும் ராஜகிரகமாகவும் இருப்பதால் இவரை வணங்கினால் அரசு துறைகளில் வேலை வாய்ப்பும்,தலைமை பொறுப்பை எற்கும்  ஆற்றலையும் அளிப்பார் என புராணங்கள் கூறுகின்றனமேலும் சூரியன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கோவிலில் தரிசிப்பது சிறப்பு வாய்ந்ததாகும்

இந்த தினத்தில் இறைவனை மனம்,மெய் ஆகியவற்றால் வணங்கி வழிபட்டால் அந்த ஆண்டு முழுவதும் நமக்கு முன் வரும் துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை மேலும் நாம் எடுக்கும் நல்ல காரியங்கள் தங்கு தடையின்றி கைகூடும் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்

சித்திரை வருடப்பிறப்பு அன்று செய்யவேண்டியவை….!

சித்திரை வருடப்பிறப்பு அன்று இறைவனை வழிபட்டால் லட்சுமி கடாட்சமும்,பிறவி துன்ப நிக்கமும் தெய்வத்தின் அணுக்கிரகமும் கிடைக்கும் என இதையறிந்த ஆன்றோர்கள் அருளியுள்ளனர்

சித்திரை ஸ்ரீ விளம்பி வருடம் பிறப்பதற்கு முன்தினம் இல்லத்தை சுத்தம் செய்த பிறகு பூஜை அறையில் சாமி படங்களுக்கு கீழ் தட்டில் கண்ணாடி,பழங்களை அடுக்கி வைத்துவீட்டு பின்னர் அதிகாலை எழுந்து அந்த பழங்களில் கண் விழித்தால் எப்போதும் கனியின் சுவை போன்ற இனிப்பான வாழ்வு அமையும் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது

ஆலயங்களுக்கு சென்று இறைவனை தொழுதல் வேண்டும் தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்தும்,பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது ஒவ்வொரு வரையும் வாழ்வாங்கு வாழவைக்கும்

மங்கல பொருட்கள் அணிந்து,இல்லங்களில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து ,சூரிய நமஸ்காரம் செய்து வழிபடலாம் மற்றும் பிரகாசமான வாழ்க்கை வேண்டியும் இறைவனை வழிபாடு செய்யலாம்

சித்ரகுப்த விரதம்…!

 சித்திரை மாத வளர்பிறை அல்லது தேய்பிறை சப்தமி அன்று, சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது, சித்ரகுப்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அந்த தினத்தில் தான் சித்ரகுப்தர் பிறந்தார் அன்று அவரை வழிபட்டால் ஆயுள் விருத்தி ஏற்படும் செல்வ விருத்தியும் ,ஆதாயமும் கிடைக்கும்

இரவு நிலவு பார்த்த பின் உணவு அருந்த வேண்டும் நமது பாவ புண்ணிய கணக்கை பார்க்கும் அவரை வழிபட்டு புண்ணியத்தை அதிகரித்து கொள்வது மட்டுமல்லாமல் அனுகூலத்தையும் வர வைத்து கொள்வோம்

சித்ரா பெளர்ணமி..!

சித்திரைத் தொடங்கி ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியையொட்டி வரும் நாள் விசேஷமாகத் திகழும். அவ்வகையில், சித்ரா பெளர்ணமியும் உன்னதமானது. அம்பாள் வழிபாட்டுக்கும் சித்த புருஷர்களை வணங்கித் தொழவும் உகந்த திருநாள் இது. சித்ரா பௌர்ணமி அன்றுதான் மீனாட்சியம்மை சொக்கநாதரை மணந்துகொண்டாள்.

அட்சய திருதியை…!

சித்திரை மாதத்தின் வளர்பிறை திருதியை திதி நாளே, அட்சய திருதியைத் திருநாளாகும். ‘அட்சயம்’ என்றால் வளர்வது என்று பொருள். வனவாசத்தின்போது சூரியனின் அருளால் பாண்டவர்களுக்கு அட்சய பாத்திரம் கிடைத்ததும், பாற்கடலில் அலைமகள் அவதரித்ததும் இந்நாளில்தான். அன்று, செய்யப்படும் நற்காரியங்கள் அனைத்தும் பல்கிப் பெருகும் என்பதால், அன்று, தானதர்மங்கள் செய்வதும் வழிபாடுகள் நடத்துவதாலும் புண்ணியங்கள் பெருகும்.

மேலும் தகவலுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்