ஈராக்கில் 4 வருடங்களுக்கு முன் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல் இன்று வருகை..!
இன்று ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படுகின்றன.
ஈராக்கில் உச்சகட்ட போரின்போது 2014-ஆம் ஆண்டு மொசூல் நகரை விட்டு வெளியேற முயன்ற 39 இந்தியர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்க இந்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்துவந்த நிலையில், 39 பேரும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
கடந்த மாதம் 20-ம் தேதி தெரிவித்தார்.
இறந்தவர்களின் உடல்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே டி.என்.ஏ. சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் 38 பேரின் டி.என்.ஏ. காணாமல் போன இந்தியர்களின் டி.என்.ஏ.வை ஒத்திருப்பது தெரியவந்தது.
ஒருவரின் மட்டும் டி.என்.ஏ. 70 சதவீதம் மட்டுமே ஒத்துள்ளது. இந்நிலையில், ஈராக் சென்ற மத்திய அமைச்சர் வி.கே.சிங்கிடம், 38 இந்தியர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. தனி விமானம் மூலம் அவர்களது உடல்கள் இன்று இந்தியா கொண்டு வரப்படுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.