சற்று தாமதமானாலும் காவிரி நீர் நிச்சயம் தமிழகத்திற்கு வரும்…!
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கால தாமதமானாலும் நிச்சயம் காவிரி நீர், தமிழகத்திற்கு வரும் என கூறியுள்ளார்.
தருமபுரியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், காவிரிக்காக போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி, மாலையிலேயே விடுதலையாகும் மு.க.ஸ்டாலின், காவிரி பிரச்னை தீரும் வரை, சிறையிலிருந்து வெளியே வரமாட்டேன், என கூறத் தயாரா? என்றும், தமிழிசை சவால் விடுத்துள்ளார்.
1974-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கை, தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காக, திமுக தலைவர் கருணாநிதி வழக்கை திரும்ப பெற்றார் என்றும், அதனால்தான் இன்று வரை, காவிரி விவகாரம் தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது, என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், சற்று தாமதமானாலும், தற்போது காவிரி நீர் நிச்சயம் தமிழகத்திற்கு வரும், என்றும் தமிழிசை தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.