சிகிச்சைப் பலனின்றி தீக்குளித்த மதிமுக தொண்டர் உயிரிழப்பு!

Default Image

சிகிச்சைப் பலனின்றி மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயண தொடக்க விழாவின்போது தீக்குளித்த மதிமுக தொண்டர்  உயிரிழந்தார்.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சனிக்கிழமை மதுரையில் நடைபயணத்தை தொடங்கினார். தொடக்க விழாவில் கலந்து கொண்ட சிவகாசியைச் சேர்ந்த மதிமுக தொண்டர் ரவி என்பவர் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.

92% தீக்காயங்களுடன் மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இரு நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிவகாசியில் அச்சகம் ஒன்றை நடத்திவந்த இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.

விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞரணி துணை அமைப்பாளரான ரவி, காவிரி மேலாண்மை வாரியம், நீட் போன்ற விவகாரங்களில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவருவதாக அவருக்கு நெருங்கியவர்களிடம் புலம்பிவந்ததாக கூறப்படுகிறது.

ரவியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வைகோ 10 மணிக்கு அரசு மருத்துவமனைக்கு வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்