விரைவில் வெளியாகும் சி.பி.எஸ்.சி பொதுத் தேர்வு அட்டவனை..?
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால், வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இந்த வருடம் நாடு முழுவதும் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.சி. மாணவர்கள் பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.
இதனால், 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சில பள்ளிகளில் கொரோனா நெறிமுறைகளை பின் பற்றி விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் விளக்கங்ளை கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் 12-ம் வகுப்புக்கான சிபிஎஸ்சி பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதலில் செய்முறை தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகும் எனவும் பின்னர், முழு அட்டவணை www.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.