கடல்நீரினுள் தேனிலவு கொண்டாடும் காஜல் அகர்வால் .!வைரல் புகைப்படங்கள் உள்ளே .!
கடல்நீரினுள் தேனிலவு கொண்டாடும் காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் “லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.
தற்போது மாலத்தீவில் தேனிலவு கொண்டாடும் இந்த தம்பதியினர் கணவருடனான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் . அந்த வகையில் தற்போது தண்ணீருக்குள் இருக்கும் அறையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அறையை சுற்றிலும் கடல்நீர் விதவிதமான மீன்கள் என இருக்கும் அதில் தனக்கு புதுமையான அனுபவமாகவும், வித்தியாசமானதாகவும் உள்ளதாக காஜல் அகர்வால் குறிப்பிட்டுள்ளார் . தற்போது அந்த புகைப்படங்கள் அதிகளவில் லைக்குகளை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.