மெட்ரோ பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் விஜய் ஆண்டனி.! பர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு.!
மெட்ரோ பட இயக்குனர் மற்றும் விஜய் ஆண்டனியின் கூட்டணியில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று காலை 10.11 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் தற்போது சிரிஷ் மற்றும் பாபி சிம்ஹா நடித்து சூப்பர் ஹிட்டான மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கவுள்ளார் . சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது . நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தினை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10.11மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் . இந்த படத்திற்கு ‘கோடியில் ஒருவன்’ என்று பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
Get ready #VijayAntony14 1st look tomorrow @10:11 AM.
From the director of METRO @akananda@im_aathmika @nsuthay @nivaskprasanna @chendurfilm @FvInfiniti @bkamalbohra @Dhananjayang @lalithagd TDRaja @jj_pradeep @Panbohra @bhashyasree@RIAZtheboss @vamsikaka @CtcMediaboy pic.twitter.com/sithnKHHxP— vijayantony (@vijayantony) November 12, 2020