7.5 % உள்ஒதுக்கீடு ! 395 மாணவர்களுக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Default Image

7.5 % உள்ஒதுக்கீடு மூலம் 395 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் : 

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது.இந்த சட்டம்  அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

ஆளுநர் ஒப்புதல் தரவில்லை :

ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.இதனால் ஆளுநரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அரசாணை வெளியிட்ட தமிழக அரசு : 

 தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசாணையை வெளியிட்டது.சுமார் 40 நாட்களுக்கு  மேல் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

சுமார் 40 நாட்களுக்கு  மேல் ஆளுநர்  அக்டோபர் 30-ஆம் தேதி அன்று  ஒப்புதல் : 

கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி  மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் 7.5 % உள்ஒதுக்கீடு மூலம் 395 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 304 எம்.பி.பி.எஸ் இடங்கள், 91 பி.டி.எஸ் இடங்கள் என்று  மொத்தம் 395 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்