மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு:இதுவரை 39,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் .!
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான கடைசி நாளான இன்று இதுவரை 39,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.அதில் வெற்றி பெற்றவர்கள் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் .அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குமான கலந்தாய்வில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு 3-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது .
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் சேர்வதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்து விட்டதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது .இதுவரை கலந்தாய்வில் கலந்து கொள்ள 39,000-க்கும் மேற்பட்டோர் விண்ணிப்பித்துள்ளனர் .அதில் 35,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப கட்டணங்களை செலுத்தியுள்ளதாகவும்,20,000-க்கும் மேற்பட்டோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடைசி நாளான பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை ஆன்லைனில் இரவு 11.59 மணி வரை சமர்ப்பிக்கலாம் என்றும் , விண்ணப்பங்கள் சரிப்பார்க்கப்பட்டு 16-ஆம் தேதி கலந்தாய்வில் கலந்து கொள்பவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும் மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.