அமைச்சர் துரைக்கண்ணு மரண அறிவிப்பில் மர்மம் எதுவும் இல்லை-முதல்வர்.!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நேற்று கன்னியாகுமரியும் இன்று தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு ஆய்வு மேற்கொண்டு, பல திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற பல பணிகளை தொடங்கி வைத்தார், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், பேசிய முதல்வர் விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பட்டாசு உற்பத்தி தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
மேலும், துரைக்கண்ணு மரணத்தில் என்ன மர்மம்..? என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும். அமைச்சர் துரைக்கண்ணு மரண அறிவிப்பில் மர்மம் எதுவும் இல்லை. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை ஸ்டாலின் கொச்சைப்படுத்துவது கண்டனத்திற்குரியது.
கருணாநிதிக்கு சிகிச்சை அளித்த அதே மருத்துவமனையில்தான் அமைச்சர் துரைக்கண்ணுவும் சிகிச்சை பெற்றார். கொரோனா இறப்பில் கூட அரசியல் லாபம் பார்ப்பதா என முதல்வர் தெரிவித்தார்.