இனி முதல் ஓடிடி படங்களுக்கும் சென்சார்.! மத்திய அரசு உத்தரவு.!

மத்திய அரசானது ஓடிடி தளங்கள், ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது . அதனால் பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வந்தனர் . இதனால் பலர் ஓடிடி தளங்கள் வாயிலாக படங்களை கண்டு களித்தனர் . படங்கள் மட்டுமில்லாமல் செய்திகள், தொடர்கள் என அனைத்தும் ஓடிடி தளங்களில் ஒளிப்பரப்ப்பட்டு வந்தது .
ஆனால் இதே ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களில் ஆபாச காட்சிகளும் , வன்முறை காட்சிகளும் இருப்பதாகவும் , அதனால் குடும்பத்துடன் இணைந்து ஓடிடியில் ஒரு சில படங்களை பார்க்க இயலவில்லை என்றும் புகார் அளித்திருந்தனர் . அதற்கு மத்திய அரசிடம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டது .
திரையரங்குகளில் ரிலீஸ் செய்யும் படங்கள் அனைத்தும் தணிக்கை குழுவிடமிருந்து சென்சார் வழங்கப்பட்ட பின்னரே திரையரங்குகளில் அந்த படம் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்படும் . ஆனால் இது இணையதளம் வாயிலாக அதாவது ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை . எனவே ஓடிடி தளங்களுக்கும் சென்சார் போன்ற கட்டுபாடுகளை செயல்படுத்த வேண்டும் என்றும், அப்போது தான் ஆபாச காட்சிகள் இல்லாமல் இருக்கும் என்றும் கோரிக்கை விடப்பட்டது .
இதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு டிஜிட்டல் தளங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே அனைத்து ஆன்லைன் செய்தி நிறுவனங்கள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் திரைப்படங்கள், தொடர்கள், நிகழ்ச்சிகள் , ஓடிடி தளங்கள் உள்ளிட்ட அனைத்தும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே டிஜிட்டல் மீடியாக்கள் மற்றும் ஓடிடி தளங்கள் அனைத்திற்கும் புதிய கட்டுபாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025