சிம்புவின் “ஈஸ்வரன்” படத்திலிருந்து வெளியான புகைப்படங்கள்.!
நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள ஈஸ்வரன் படத்திலிருந்து ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்காக அவர் உடல் எடையை குறைத்ததும், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. பாலாஜி காப்பா தயாரிக்க தமன்.எஸ் இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் திண்டுக்கல்லில் தொடங்கி 40 நாட்கள் படப்பிடிப்பிற்கு பின்னர் வெள்ளிக்கிழமை அன்று முடிவடைந்தது . அதனையடுத்து அடுத்தகட்ட பணியான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விருந்தாக வெளியாகவிருக்கும் இந்த படத்தின் டீசரை தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .
இதுவரை இந்த படத்தில் நடிக்கும் நிதி அகர்வாலின் லுக் வெளியாகாத நிலையில் தற்போது ஈஸ்வரன் படத்திலிருந்து ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன . அதில் சிம்புவுடன் நிதி அகர்வால் இணைந்துள்ள ஸ்டில்லும் , இயக்குனர் பாரதிராஜாவின் குடும்பத்துடன் உள்ள ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது . பக்கா கிராம கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.