மோடி வேண்டுமென்றே செய்த ஊரடங்கு மற்றும் பணமதிப்பிழப்பால் பல்வேறு குடும்பங்கள் சிதைந்துள்ளது – ராகுல் காந்தி!
வேண்டுமென்றே மோடியால் போடப்பட்ட ஊரடங்கு மற்றும் பணமதிப்பிழப்பால் பல்வேறு குடும்பங்கள் சிதைந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தெலுங்கானாவினை பூர்விகமாக கொண்ட ஐஸ்வர்யா எனும் மாணவி டெல்லியில் கல்லூரி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் தனது குடும்பத்தின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து மனமுடைந்த நிலையில் இருந்த அவர், தனது படிப்பை தொடர முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த அவர், கடந்த 2 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மோடி வேண்டுமென்றே போட்ட நாடுமுழுவதுமான ஊரடங்கு மற்றும் பணமதிப்பிழப்பால் பல்வேறு குடும்பங்கள் சிதைந்துள்ளதாக கூறியுள்ளார்.
ఈ అత్యంత విచారకరమైన సమయంలో ఈ విద్యార్థిని కుటుంబ సభ్యులకు నా ప్రగాడ సంతాపం తెలుపుతున్నాను.
ఉద్దేశ పూర్వకంగా చేసిన నోట్ల రద్దు మరియు లాక్డౌన్ ద్వారా, బీజేపి ప్రభుత్వం లెక్కలేనన్ని కుటుంబాలను నాశనం చేసింది.
ఇది నిజం! ఇదే నిజం!! pic.twitter.com/mSszEES6ha
— Rahul Gandhi (@RahulGandhi) November 9, 2020