கருப்பா இருக்கிறவங்க என்ன செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க .! வேல்முருகன் ஆவேசம்.!

Default Image

கருப்பா இருக்கிறவங்க என்ன செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க.. நாங்க எல்லாம் மனிதர்கள் இல்லையா ? விலங்குகளா ? என்று வேல்முருகன் ஆவேசமாக பேசியுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரேகா அவர்கள் வெளியேற அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார் . அதற்கு அடுத்த வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டில் நுழைந்தார் .

இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய வேல்முருகன் அளித்த பேட்டிகளில் எல்லாம் பிக்பாஸ் வீட்டினுள் நிகழும் பல உண்மைகளை கூறியுள்ளார் . அதில் சனம் மற்றும் வேல் முருகன் இணைந்து பந்து எறியும் டாஸ்க்கில் வெற்றி பெற்ற போது கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டார் . அதனை பலர் சர்ச்சையாக்கி விமர்சனம் செய்து மீம்ஸ்களை உருவாக்கி கிண்டல் செய்தனர் .

இது தொடர்பாக பேசிய வேல்முருகன் , நாங்கள் இருவரும் வெற்றி பெற மாட்டோம் என்று நினைத்த அனைவருக்கும் எங்களது வெற்றி நெற்றி அடியாக இருந்தது . அந்த மகிழ்ச்சியில் தான் சனம் அவர்களை கட்டி தழுவுனேன் என்றும்,வேறு எந்த தப்பான நோக்குமில்லை என்றும் , அதற்கு  முன்பும்  , பின்பும்  யாரையும் நான் கட்டிப்பிடிக்க வில்லை என்று கூறினார் .

இதை விட மோசமான செயல்கள் அந்த வீட்டில் நிகழந்துள்ளது . அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நான் கட்டிப் பிடித்ததையும்,சினேகன் கட்டிபிடித்ததையும் விமர்சனம் செய்கிறார்கள் . கருப்பா இருக்கிற நாங்க எல்லாம் மனிதர்கள் இல்லையா? விலங்குகளா ? கருப்பா இருக்கிறவங்க என்ன செஞ்சாலும் குத்தம் கண்டுபிடிக்கிறாங்க என்று ஆவேசமாக வேல்முருகன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala