அனுமதியின்றி நடைபெறும் வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது என உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம்!
அனுமதியின்றி நடைபெறும் வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாஜாகவினர் சார்பில் நடைபெறவிருந்த வேல் யாத்திரை தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி சில இடங்களில் வேல் யாத்திரை நடத்தக்கூடிய பாஜகவினரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் மத நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என பாஜகவினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாஜகவினரை பார்த்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். அதாவது ஆயுதமாகிய வேல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வேல் யாத்திரை எவ்வாறு நடத்த முடியும்? அனுமதி இன்னும் கொடுக்காத நிலையில் பாஜாகவினர் வேல் யாத்திரை நடத்தியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், வேல் யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறை தலையிடக்கூடாது என உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்து, வழக்கை வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி வரை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.