கணவன்-மனைவியாக சோம் ,ரம்யா.! அடுத்த காதல் ஜோடி ரெடி .?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் சோம் மற்றும் ரம்யா கணவன், மனைவியாக நடிக்க கூறி அடுத்த காதல் ஜோடி ரெடி செய்துள்ளார் பிக்பாஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவை பாலாஜி மற்றும் ஷிவானி இடையேயான காதல் காட்சிகளை ரிசித்து வரும் ரசிகர்களுக்கு அடுத்ததாக ஒரு காதல் ஜோடியை கூட பிக்பாஸ் தந்துள்ளார் . அதாவது பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் சோம் மற்றும் ரம்யா ஆகிய இருவரும் கணவன், மனைவியாக நடிக்க வைத்துள்ளார் .
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில், ’பாட்டி சொல்லை தட்டாதே’ டாஸ்க்கிற்காக சோம் மற்றும் ரம்யா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடிக்கவும், இருவருக்கும் திருடர்கள் கதாபாத்திரமும் கொடுத்துள்ளார் பிக்பாஸ். இவர்கள் இருவரும் பாட்டியின் இளைய மகன் மற்றும் இளைய மருமகளாக நடிக்கின்றனர். மேலும் சோம்-ரம்யாவின் மகளாக கேப்ரில்லா நடிக்கிறார் . இவர்கள் மூவரும் இணைந்து வீட்டில் பாட்டி பத்திரப்படுத்தி பெட்டிக்குள் வைத்துள்ள சொத்து பத்திரத்தை திருடும் டாஸ்க்கை பிக்பாஸ் வழங்கியுள்ளார் .
இந்த டாஸ்க் மூலம் மீண்டும் ஒரு காதல் மலருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே சோம் சேகருக்கு ரம்யாவிடம் கிரஷ் என்பதும் , அவர் கொடுத்த சாக்லேட்டை பத்திரமாகவும் வைத்திருக்கவும் செய்தார் . அதனையடுத்து சமீபத்தில் கூட சோம் அவர்களை ரம்யா தம்பி என்று கூறியதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வைரலாக்கியது குறிப்பிடத்தக்கது .
#Day37 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Bhz76QazK8
— Vijay Television (@vijaytelevision) November 10, 2020