கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவமனையில் அனுமதி!
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவமனையில் அனுமதி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்து வருகிறது.
இந்த வைரஸ் பாதிப்பால் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.