பேயாக அஞ்சலி ,லவ் பாயாக யோகிபாபு.! “பூச்சாண்டி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!
யோகி பாபு மற்றும் அஞ்சலி நடிக்கும் பூச்சாண்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பல படங்களில் ஹீரோவாக நடிப்பவர் யோகி பாபு . கடந்த 2009-ஆம் ஆண்டு யோகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யோகிபாபு தொடர்ந்து வேலாயுதம், சென்னை எக்ஸ்பிரஸ், மான் கராத்தே, ஐ, காக்கி சட்டை, சர்கார், நிகில் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார் . அதனையடுத்து கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி , இறுதியாக தர்மபிரபு படத்தில் எமனாக நடித்து மக்கள் மனதை வென்றார் .
இந்த நிலையில் தற்போது இவர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார் . கே.எஸ்.சீனிஷ் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பூச்சாண்டி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பேய்கள் முன்னேற்ற கழகம் என்ற போர்டுடன் நீண்ட சுருண்ட முடியுடன் கையில் ரோஸூடன் யோகிபாபு உள்ளார் . பேயாக அஞ்சலி நடிக்கிறார்.அவரை ஒரு தலையாக யோகி பாபு காதிலிப்பது தான் கதை என்று கூறப்படுகிறது . தற்போது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Here’s the first look of #POOCHANDI #PoochandiFirstLook????@directorkj @SoldiersFactory @iYogiBabu @Arunrajakamaraj @twitavvi @dopmaruthu @Composer_Vishal @editorsuresh @SaktheeArtDir @silvastunt @kukarthk pic.twitter.com/sBmjPo1Us2
— Anjali (@yoursanjali) November 9, 2020