மனுஸ்மிருதி விவகாரம்..மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!
கடந்த மாதம் மனுஸ்மிருதி குறித்து திருமாவளவன் பேசிய வீடியோ வைரலாகி பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இதனால், திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையில், மனுஸ்மிருதி பற்றி அவதூறாக பேசியதாக கூறி காசிராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது சொந்த அரசியல் லாபத்துக்காக, இந்துக்களை அவமதித்ததுடன், நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சித்த திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுஸ்மிருதி சட்ட புத்தகம் இல்லை, அதன் மொழிபெயர்ப்பு சரியா..? தவறா..? என்பது தெரியவில்லை. மனுஸ்மிருதி பற்றி திருமாவளவன் தன்னுடைய விளக்கத்தை தந்துள்ளார். அது அவருடைய பேச்சுரிமை. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.