தமிழகத்தில் நாளை முதல் தியேட்டர்கள் திறப்பு.!திரையிடப்படும் மெகா ஹிட் படங்கள்.!
தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் பழைய மெகா ஹிட் படங்கள் தீபாவளிக்கு திரையிட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி 50% இருக்கைகளுடன் திரையரங்குகளும் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விபிஎப் கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து புது திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது . அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் படத்தின் வசூலில் 50% -ஐ அளித்தால் விபிஎப் கட்டணத்தை கைவிடுவதாக அறிவித்தனர் .
இந்த விபிஎப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்த தொடர்ந்து நடந்து வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பரமணியம் தமிழகத்தில் திரையரங்குகள் வரும் 10-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், தியேட்டரில் தங்களிடம் உள்ள பழைய வெற்றி திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
அதன்படி 8 மாதங்களுக்கு பிறகு நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளது. மேலும் புதுப்பட ரீலீஸ் இல்லாத காரணமாக முன்னணி நடிகர்களின் மெகா ஹிட் படங்களை திரையிடப்படவுள்ளது. அதன்படி ரஜினியின் சிவாஜி, விஜய்யின் மெர்சல், அஜித்தின் விஸ்வாசம், கமலின் பாபநாசம், தனுஷின் அசுரன் ஆகிய படங்களும், கடந்தாண்டு வெளியாகி வசூலில் அள்ளி குவித்து மெகா ஹிட்டான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் ஓ மை கடவுளே ஆகிய படங்களை திரையிட உள்ளதாக கூறப்படுகிறது.