#BiharElection : பீகாரில் நாளை தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை! ஆட்சியை பிடிக்க போவது யார்?

Default Image

பீகாரில் நாளை தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை.

பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் – காங்கிரஸ்-இடதுசாரிகளின் மகா கூட்டணி, சிராங்க் பசுவானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது.

இந்நிலையில், மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்தலானது, 71 தொகுதிகளில், அக்டொபர் 28 தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், 94 தொகுதிகளில் நவ.3ம் தேதி இரண்டாம் கட்ட  வாக்குப்பதிவும், 78 தொகுதிகளில் நவ.7ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.

ஆட்சியை கைப்பற்ற, மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 122 இடங்களை கைப்பற்ற  வேண்டும். இதனையடுத்து, பீகாரில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. நாள் மாலைக்குள் முடிவுகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அசம்பாவிதங்களை தடுக்க மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாக்கு என்னும் மையங்களை சுசுற்றி மக்கள் கூடுவதை தடுக்க, 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்