தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வரும் நவம்பர் 11ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதியில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், நவம்பர் 11ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனபடி,
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.