#Myanmar Election : ஆங் சான் சூகியின் கட்சி முன்னிலை! கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்!

Default Image

மியான்மர் பொது தேர்தலில், ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி முன்னிலை.

மியான்மரில் 50 ஆண்டுகால இராணுவ ஆட்சிக்கு பின், 2015-ல் ஜனநாயக ரீதியிலான பொது தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று, மியான்மர் நாடாளுமன்றத்தின் இரு அவைகள், 7 மாநில சட்டப்பேரவைகள் மற்றும் 7 மண்டலங்கள் என 1,171 இடங்களில் தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு மத்தியில், மக்கள் ஜனநாயக கடமையை ஆற்ற மிகுந்த ஆர்வத்துடன்  செயல்பட்டுள்ளனர். மிகவும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடைபெற்ற நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு, அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், விடிய விடிய வாக்கு என்னும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில், ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி முன்னிலையில் இருந்து வருகிற நிலையில், மீண்டும் அவரது கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில்  கொள்ளாமல், அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்