தலோஜா மத்திய சிறைக்கு அர்னாப் கோஸ்வாமி திடீர் மாற்றம்.. காரணம் இதுதான்!

பாதுகாப்பு காரணங்களுக்காக அர்னாப் கோஸ்வாமி, தலோஜா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அன்வை நாயக் என்ற கட்டட வடிவமைப்பாளர், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி, பெரோஸ் ஷேக் மற்றும் நித்தீஷ் சர்தா தான் காரணம் எனவும், அவர்கள் தனக்கு தரவேண்டிய 5.40 கோடி ரூபாய் தராததால் தற்கொலை செய்யப்போவதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

இதன்காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த வழக்கு 2019 ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து போலீசார், அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை இழுத்துக்கொண்டு போலீஸ் வேனில் ஏற்றியது, பெரியளவில் சர்ச்சையானது.

அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்தும் முகாமில் இருக்கும் அவரை இன்று காலை போலீஸ் வேனில் தலோஜா மத்திய சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அந்த வேனின் ஜன்னல்களை சுற்றி கருப்பு நிற திரையால் மூடப்பட்டுள்ளது. மேலும், அர்னாப் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்