பெண் சக்தியை நிரூபித்துள்ளார் கமலா ஹாரிஸ்- ஓ.பன்னீர்செல்வம்.!
அமெரிக்க துணை அதிபராக வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் பெண் சக்தியை நிரூபித்துள்ளார் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸிற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பை தோற்கடித்து ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வரலாற்றிலையே 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார் ஜோ பைடன் . மேலும் துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார் .
இருவருக்கும் பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் துணை அதிபரான கமலா ஹாரிஸிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,இது இந்தியர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் தருணம் என்றும், அமெரிக்காவால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பெண் சக்தியை நிரூபித்துள்ளார் . உலகை வெல்லும் மனநிலையுடன் இருக்கும் ஒரு தமிழ் பெண்ணின் வலிமையை கமலா ஹாரிஸ் மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார்.உங்களது வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
Ms.Kamala Harris @KamalaHarris the Vice President elect of US has proved the woman power. She has once again re established the strength of a Tamil woman, who has the grit to conquer the world. My heartfelt wishes for your success. #USElectionResults2020 #KamalaHarrisVP pic.twitter.com/Ii7L3rRggH
— O Panneerselvam (@OfficeOfOPS) November 8, 2020