வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து.!

Default Image

அமேரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் தாய் ஷ்யாமளா கோபாலன் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவிற்கு சென்றபோது, ஜமைக்கா நாட்டை சார்ந்த ஹாரிஸை திருமணம் செய்து கொண்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 4 நாட்களாக நடைபெற்றது. அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270- தேர்தல் வாக்குகள் பெற வேண்டும். ஆனால், ஜோ பைடன் 290 -தேர்தல் வாக்குகளும், டிரம்ப் 214-தேர்தல் வாக்குகளும் பெற்றனர். இந்நிலையில், ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை அதிபராக தேர்வு கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இருவருக்கும் பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அதிர்ச்சியூட்டும் வெற்றியால் அவர் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளாதால், துளசேந்திரபுரம் கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், தங்கள் வீடுகள் முன் பெண்கள் கோலங்களை போட்டும் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். பெண்கள் போட்ட கோலத்தில் வணக்கம் அமெரிக்கா என இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்