அர்ச்சனாவை பார்த்து “தலைவலி வந்துச்சு” என்று கூறிய பாலாஜி.! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வேல்முருகன்.!
அர்ச்சனாவை பார்த்து “தலைவலி வந்துச்சு” என்று பாலாஜி கூறியதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார் .
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரேகா அவர்கள் வெளியேற அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார் . அதற்கு அடுத்த வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டில் நுழைந்தார் .
இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய வேல்முருகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல உண்மைகளை கூறியுள்ளார் . அதில் பாலாஜி தன்னிடம் வந்து நீங்கள் யாரிடமும் நெருக்கமாக பழகவில்லை என்றால் உங்களுக்கு தான் நஷ்டம் என்று கூறிய போது என்ன நஷ்டம் என்று நான் கேட்டேன் . அதற்கு அவர் நெருக்கமாக பழகியவர்களின் குற்றங்களை சுட்டி காட்டாமல் , உங்களை போன்ற நெருக்கமில்லாதவர்கள் செய்கிற சிறு தவறையும் பெரிதாக சுட்டுக் காட்டுவேன் என்று கூறியுள்ளார். எனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அவருடன் பேசி அடிதடி நடக்கும் வாய்ப்பு அதிகம் இருந்ததாலையே அவரிடம் அதிகம் பேசாமல் விலகி இருந்ததாக வேல்முருகன் கூறியுள்ளார்.
மேலும் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தவுடன் தலைவலி வந்து விட்டது என்று அவர் முன்பு கூறியதாகவும் , அதற்கு அர்ச்சனா என்னை தலைவலி என்று சொல்கிறாயா என்று பாலாஜியிடம் கேட்க ஆமாம் என்று கூறியதாகவும் வெளிப்படுத்திய வேல்முருகன் , மற்றவர்களை வெறுப்பேற்றி அவர்களை கோவப்படுத்தி சண்டை போட வைத்து வீட்டை விட்டு வெளியேற்றும் தந்திரத்தை தான் பாலாஜி செய்து வருவதாகவும், அது தவறு என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.