தமிழக அரசு பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது -முதலமைச்சர் பழனிசாமி
தமிழக அரசு பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான நீர் மேலாண்மை கையாண்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு விருது பட்டியலை அறிவித்துள்ளது. அதில், நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான விருதினை தமிழக அரசு பெற்றுள்ளது.வேலூர், கரூர் மாவட்டங்கள் நீர் மேலாண்மையில் சிறந்த மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. நீர்நிலைகளை பாதுகாப்பதில் சிறந்த மாவட்டமாக பெரம்பலூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலங்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,நீர்மேலாண்மையில் 2019க்கான சிறந்த மாநிலமாக, ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய விருதினை தமிழக அரசு பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீர்நிலைகளை புதுப்பித்தலில் வேலூர்,கரூர் மாவட்டங்கள் முதல் இரு இடங்களையும், நீர்நிலைகளை பாதுகாப்பதில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தையும் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நீர்மேலாண்மையில் 2019க்கான சிறந்த மாநிலமாக, ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய விருதினை தமிழக அரசு பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீர்நிலைகளை புதுப்பித்தலில் வேலூர்,கரூர் மாவட்டங்கள் முதல் இரு இடங்களையும், நீர்நிலைகளை பாதுகாப்பதில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தையும் பெற்றுள்ளது.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 7, 2020
CMEdappadiPalaniswami,