தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்: விழிப்புடன் இருப்போம், புற்றுநோயை விரட்டுவோம்- துணை முதல்வர் பன்னீர்செல்வம்.!

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி புகையிலை பொருட்களை தவிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 7-ஆம் தேதியான இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம் 2014-ஆம் ஆண்டு முதல் அனுசரித்து வருகிறது .
இது குறித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, இன்று (நவம்பர் 7) தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்.இத்தினத்தில் புகையிலை உயிரைக் கொல்லும் என்பதை அனைவரும் நினைவில் கொண்டு புகையிலை பொருட்களை முற்றிலும் தவிர்த்து அனைவரிடத்திலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் . விழிப்புடன் இருப்போம் புற்றுநோயை விரட்டுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று (நவம்பர் 7) தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம். இத்தினத்தில் “புகையிலை உயிரைக்கொல்லும்” என்பதை அனைவரும் நினைவில் கொண்டு புகையிலைப்பொருட்களை முற்றிலும் தவிர்த்து அனைவரிடத்திலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
விழிப்போடு இருப்போம்!
புற்றுநோயை விரட்டுவோம்! pic.twitter.com/TLUwNyNAWV— O Panneerselvam (@OfficeOfOPS) November 7, 2020