கமலஹாசன் மற்றும் சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டுமிரட்டல்! போலீசார் விசாரணை!
கமலஹாசன் மற்றும் சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் .
நேற்று எழும்பூரில் செயல்படும் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், நடிகர்கள் சரத்குமார் மற்றும் கமலஹாசன் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீடு மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலஹாசன் வீட்டிற்கு போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டுகள் சிக்கவில்லை.
இதனையடுத்து, இந்த மிரட்டல் வதந்தி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து, சைபர் கிரைம் போலீசாருடன் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.