நயன்தாரா போல வளம் வர வேண்டும், விக்ரமுடன் நடிக்க ஆசை – நடிகை அபர்ணா!
தமிழ் திரையுலகில் நயன்தாரா போல வளம் வர வேண்டும் எனவும், விக்ரமுடன் நடிக்க ஆசை எனவும் சூரரை போற்று பட நடிகை அபர்ணா கூறியுள்ளார்.
தமிழில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா அவர்களின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டு வெளிவர இருக்கும் திரைப்படம் தான் சூராரை போற்று. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார். படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், அவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணாவும் நடித்துள்ளார். படத்திலிருந்து காட்டு பயலே எனும் பாடல் மட்டும் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில், படம் வருகின்ற 12 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி அபர்ணா இது குறித்து அண்மையில் பேசியுள்ளார்.
அப்பொழுது பேசிய அவர், இந்த படத்தில் நடிக்க என்னை சிபாரிசு செய்த ஜி.வி.பிரகாசுக்கு நன்றி என கூறியுள்ளார். மேலும், சூர்யாவுடன் என்னை பார்த்த பொழுது இவரா கதாநாயகி என தூற்றியவர்கள் தான் அதிகம். ஆனால், பாடல் வெளியாகிய பிறகு பலரும் என்னை பாராட்டினார்கள் அதற்கு சூர்யாவுக்கும் இயக்குனருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழில் நயன்தாரா போல வளம் வர வேண்டும் என்பதே எனது ஆசை, விக்ரம் அவர்களுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.