USElections 2020: மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.. ஜார்ஜியா அரசு அதிரடி

Default Image

ஜார்ஜியா மாகாணத்தில் பதிவான ஓட்டுகளை மறு எண்ணிக்கை நடத்த உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி 264 சபை வாக்குகள் பெற்று ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாகவும், வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு ஜார்ஜியா உள்ளிட்ட மூன்று மாகாணங்களின் வழக்கு தொடர்ந்தார்.

டிரம்பின் இந்த வழக்கை ஜார்ஜியா, மிக்சிகன் மாகாண நீதிமன்றங்கள் நிராகரித்துள்ள நிலையில், அந்த மனுவை ஜார்ஜியா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் ஜார்ஜியா அரசு, “மிகச்சிறிய அளவிலான வாக்கு வித்தியாசங்களை இருப்பதால், ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்” என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்