நீளமான முடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண்!
நீளமான முடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண்.
பொதுவாக பெண்கள் தங்களது கூந்தலை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதுண்டு. கூந்தலின் ஆரோக்கிய வளர்ச்சிக்காக, எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்பவர்களும் உள்ளார். அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் வசித்து வரும், நிலன்ஷி படேல் (18) என்ற இளம்பெண், கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான, த நைட் ஆப் ரெகார்ட்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு, 5 அடி 7 அங்குலம் (170.5செமீ) நீளத்திற்கு முடி வளர்த்தத்திற்காக பரிசு கொடுத்தனர்.
தற்போது, அந்த சாதனை, அவரே முறியடித்து, இளம்பருவத்தில் 2 மீட்டர் நீளத்திற்கு முடி வளர்த்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் கூறுகையில், ‘சிறு வயதில் நான் முடிவெட்ட சென்றேன். அது மிக மோசமான அனுபவமாக அமைந்துவிட்டது. அன்றிலிருந்து நன் முடிவெட்ட போவதில்லை என்று தீர்மானம் எடுத்தேன். போட்டியில் கலந்து கொண்ட பிரபலமாக நான் இந்த சாதனையை செய்யவில்லை என கூறியுள்ளார்.