நடப்பு தேர்தலே தனது கடைசி தேர்தல்.! பீகார் மாநில முதல்வர் அறிவிப்பு.!

Default Image

பீகார் மாநில முதல்வரான நிதீஷ் குமார் இதுவே தனது கடைசி தேர்தல் என்று தெரிவித்துள்ளார். 

பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும் பதிவாகியிருந்தது . இதனை தொடர்ந்து மீதமுள்ள 78 இடங்களுக்கான மூன்றாம் கட்ட வாக்குபதிவு நாளை நடைபெறவுள்ளது.

இதற்கான, பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நேற்று புர்னியா பகுதியில் கடைசியாக நடந்த பிரச்சாரத்தில் பேசிய போது,  நடப்பு தேர்தலே தனது கடைசி தேர்தல் என்றும், எனவே இந்த தேர்தலில் மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக வாக்குகளை அளித்து இந்தாண்டும் தங்களை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றும், இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைவதாகவும் பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா கட்சி தலைவருமான நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இவர் 15 வருடங்களாக பீகார் மாநில முதல்வராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.அதனாலையே அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து பல கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வரும் நிலையில், நிதிஷ் குமார் அவர்களின் காலம் முடிந்து விட்டதாக லோக் ஜன்சக்தி கட்சி தலைவரான அஜய் குமாரும், தனது கடைசி தேர்தல் இதுதான் என்று அறிவித்ததற்கு நன்றி என்றும், அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது என்று கூறி தன்னை‌ ஆசீர்வதிக்குமாறு ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி தலைவரான உபேந்திரா குஷ்வாஹாவும் கூறியுள்ளார். நாளை நடைபெறும் மூன்றாம் கட்ட வாக்குபதிவுக்கான முடிவுகள் வரும் 9-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்