#US Election : ஜார்ஜியா வாக்கு எண்ணிக்கை முடிவு! ட்ரம்ப்-ஜோ பைடன் சமநிலை!

Default Image

ஜார்ஜியா வாக்கு எண்ணிக்கை முடிவின்படி, இருவருமே சமநிலையில் உள்ளனர். 

கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய முடிவுகளின்படி 264 வாக்குகளை பெற்று ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். இவருக்கு பெரும்பான்மைக்கு இன்னும் 6 வாக்குகளே தேவைப்படுகிறது.

இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் மாநிலங்களில் நாவேடாவில் மட்டும் பைடன் முன்னிலையில்  உள்ளார். நாவேடாவில் மொத்தம் 6 வாக்குகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படாத பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, அலாஸ்கா ஆகிய மாநிலங்களில் ட்ரம்ப் கூடுதல் வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

மேலும், ஜார்ஜியாவில், ஜோ பைடன் மற்றும் ட்ரம்ப் இருவருமே 49.4% வாக்குகளை பெற்று இருவருமே சமநிலையில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்