வேல் யாத்திரை : விழுப்புரத்தில் 11 பேரை கைது செய்த போலீசார்!
விழுப்புரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாஜக-வை சேர்ந்த 11 பேரை கைது செய்த போலீசார்.
தமிழகத்தில் நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை, திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், இந்த யாத்திரை நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்தது.
இந்நிலையில், பாஜக சார்பில் இன்று தடையை மீறி வேலயாத்திரை நடத்தப்படுகிறது. இதனையடுத்து, இந்த யாத்திரை நடைபெறும் மாவட்டங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாஜக-வை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.