7 பேர் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும் – கவிஞர் வைரமுத்து
7 பேர் விடுதலை குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதான 7 பெரும் 30 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். தமிழ்நாடு அமைச்சரவை, 2018-ல் 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், ஆளுநர் இரண்டு ஆண்டு காலமாக முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
இந்நிலையில், பல அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் இந்த 7 பேரையும் விடுதலை செய்யுமாறு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘எழுவர் விடுதலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் கருணை காட்டுகிறது. தமிழக அமைச்சரவை முன்பே தீர்மானம் நிறைவேற்றி விட்டது. எங்களுக்கு மறுபில்லை என்று காங்கிரஸ் கட்சியும் பெருந்தன்மை காட்டுகிறது. இதன் பிறகும், விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும்.’ என ட்வீட் செய்துள்ளார்.