அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: வெற்றியாளரை நாம் எப்போது காண்போம்? கேள்வியெழுப்பும் மக்கள்!

Default Image

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து தாமதாகும் காரணத்தினால், மக்களிடையே வெற்றியாளரை நாம் எப்போது காண்போம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது .நேற்று முதல் நடைபெற்று வரும் , வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவையாக உள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப், 214 சபை வாக்குகளை பெற்று பின்னடைவில் இருக்கிறார். டிரம்ப் வெற்றி பெற 56 சபை வாக்குகள் தேவைப்படுகிறது.

இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருந்தது. அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் மாகாணங்களில் தொடர்ந்து இழுபறி நிலவியது. இதனால் அனைத்து மாகாணங்களிலும் தபால் வாக்குகள் எண்ணப்படாமல் இருப்பதால் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது.

இந்த தொகுதிகளில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டால் பைடன் முன்னுக்கு வருவார் எனவும், டிரம்ப் பின்னடைவை சந்திப்பதாக கூறப்படுகிறது. மேலும், அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் வழக்கு தொடர்ந்த 3 மாகாணங்களில், இரண்டு மாகாணங்களில் பைடன் முன்னிலையில் இருக்கிறார். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு வாக்கையும் நிச்சயம் எண்ண வேண்டும் என்று நியூயார்க்கில் பைடனின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நிலுவையில் இருக்கும் காரணத்தினால், அமெரிக்கர்களிடம் வெற்றியாளரை நாம் எப்போது காண்போம்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்பொழுது நிலுவையில் உள்ள வாக்குகளை எண்ணத் தொடங்கினால், தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும், ஜார்ஜியா, நெவாடா ஆகிய மாகாணங்களில் இன்று வாக்கு எண்ணும் பணிகள் நிறைவு பெறப்போவதாக தகவல்கள் வெளியானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்