இன்று தனது 32 ஆம் பிறந்தநாளை கொண்டாடும் சாதனைகளின் சொந்தக்காரர் “கிங் கோலி”

Default Image

இந்திய அணியில் கேப்டனான “கிங் கோலி”, இன்று தனது 32 ஆம் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வலம்வருபவர், விராட் கோலி. இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் “கிங் கோலி” என்று அழைக்கப்படும் இவர், 2011 ஆம் ஆண்டில் இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்ற இவரே காரணம். சர்வதேச போட்டிகளில் இதுவரை 21,901 ரன்கள் குவித்த கோலி, 70 சதங்களையும் அடித்துள்ளார்.

தனது 15 வயதில் இருந்தே கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கினார், விராட் கோலி. பின்னர் தனது 16 வயதில், முதன்முறையாக ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடினர். அதில் ஒரு போட்டியில் தனது தந்தை இறந்தது கூட தெரியாமல், சதம் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். இது, பலரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைதொடர்ந்து அவர் பல சதங்களை அடிக்க தொடங்கினார். 2011 ஆம் ஆண்டில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விராட் கோலி இடம்பிடித்தார். அதனைதொடர்ந்து, ஓருநாள், டி-20 என அனைத்து வகை போட்டிகளிலும் கலந்துக்கொண்டு, சிறப்பாக ஆடி, அப்போதைய தோனி தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டனாக பதவிவகித்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், 2017ஆம் ஆண்டு ஒருநாள் அணியின் கேப்டனாகவும் தனது பணியை சிறப்பாக ஆற்றிவருகிறார்.

அதுமட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளிலும் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற சாதனையும், முதன்முதலாக மூன்று விதமான போட்டிகளிலும் சராசரியாக 50 எகனாமி வைத்து விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி, ஐபிஎல் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் இடம்பிடித்தார். 12 ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு பெங்களூர் அணி, அணிக்காக ரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்திய வீரர் என பதிவிட்டனர். மேலும் ஐபிஎல் நிர்வாகம், வரலாற்றில் அதிக ரன்களை படைத்தவர் கோலி என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்