தில்லுமுல்லு பேர்வழிகள் ஓட்டும் சுவரொட்டிகள்! திமுக தொண்டர்கள் கிழிக்க வேண்டாம்! வாழ்க வசவாளர்கள்! – மு.க.ஸ்டாலின்

Default Image

மு.க.ஸ்டாலின் குறித்து இகழ்ந்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து வசைபாடியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து புகழ்ந்தும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், பெயரோ, முகவரியோ வெளியிட தெம்பில்லாத தில்லுமுல்லு பேர்வழிகளால் சிலசுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. ஒருபக்கம் எடப்பாடியை புகழும் வாசகங்கள், இன்னொரு பக்கம் என்னை இகழ்ந்தும் வாசகங்கள். என்னை விமர்சிப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், விமர்சனம் ஆரோக்கியமானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இருக்க வேண்டும்.

முகவரியற்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால், தடுக்க வேண்டிய கடமை அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சுவரொட்டிகளை திமுக தொண்டர்கள் கிழித்து வருகிறார்கள். அச்செயலில் ஈடுபட வேண்டாம். ஒட்டுகிறவர்கள் அனைவரையும், பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக ஓட, ஓட விரட்டியடிக்க போகிறார்கள்.

கொரோனாவில் தோல்வி,  தமிழக மாணவர்களின் கல்வி வாய்ப்பை காப்பாற்ற, மாநில உரிமைகளை பெற முடியாத கொள்ளை கூட்டம். அர்த்த ராத்திரியில், அநாமதேய சுவரொட்டிகளை ஒட்டும் முயற்சி தொடருமானால், தமிழ் மக்கள் மன்றம் வழங்க போகும் கடும் ஆயுள் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்