பயணிகளை அதிரவைத்த சென்னை – சேலம் விமானக் கட்டண உயர்வு..!தொடங்கிய ஒரே வாரத்தில் இப்படியா?என்ன கொடும சார் இது …..
சேலம் – சென்னை இடையேயான விமானக் கட்டணம்,தொடங்கிய ஒரே வாரத்தில்,1,500 ரூபாயிலிருந்து 8,500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேலத்திலிருந்து சென்னைக்கு, ட்ரூஜெட் நிறுவனம், கடந்த வாரம், விமான சேவையை தொடங்கியது. 36 இருக்கைகள் கொண்ட விமானத்தில், முதல் 3 மாதங்களுக்கு தலா 1,499 ரூபாய் மட்டுமே பயணக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், விமான சேவை தொடங்கி ஒரு வாரம்கூட ஆகாத நிலையில், கடைசி நேரத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, 1,499 ரூபாய் கட்டணத்தை 8,500 ரூபாய் வரை உயர்த்தி வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் நடுத்தர நகரங்களுக்கு படிப்படியாக விமான சேவை துவங்கப்படும் என திட்டத்தை தொடங்கி வைத்த முதலவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் – சென்னை விமான பயணம் முக்கிய அம்சங்கள்
➤சென்னை, சேலம் விமானத்தில் ரூ.1499 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (தற்போது ரூ.8500)
➤சென்னையிலிருந்து தினமும் காலை 9.50 மணிக்கு கிளம்பும் விமானம் 10.40 மணிக்கு சேலம் வந்தடையும்.
➤சேலத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்னையை சென்றடையும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.