பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கிறார் -ஆளுநர் பன்வாரிலால்!

பிரதமர் மோடியை இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் சந்திக்கிறார்.
சென்னையில் நேற்று ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் இன்று திடீரென சந்தித்தார். அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இன்று காலை விமானம் மூலம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் இருந்து டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.
தற்போது, டெல்லி சென்ற ஆளுநர் பன்வாரிலால் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னர், டெல்லியில் வருகின்ற வெள்ளிக்கிழமை வரை ஆளுநர் தங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025