டொனால்ட் டிரம்ப் பதிவிட்ட ட்வீட் – ட்விட்டர் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ட்விட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில், தேர்தலில் நாம்தான் அதிக வாக்குகளை வாங்கியிருக்கிறோம். ஆனால் பைடன் ஆதரவாளர்கள் வெற்றியை திருட பார்க்கிறார்கள்.தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி செய்கின்றனர் என்று பதிவிட்டார்.இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் ட்விட்டுக்கு ட்விட்டர் நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.அதாவது, தேர்தல் நடத்தை விதிகளை டிரம்ப் மீறி விட்டதாக தெரிவித்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.
We placed a warning on a Tweet from @realDonaldTrump for making a potentially misleading claim about an election. This action is in line with our Civic Integrity Policy. More here: https://t.co/k6OkjNXEAm
— Twitter Safety (@TwitterSafety) November 4, 2020