தேர்தல் முடிவுகள் – அதிபர் டிரம்புக்கு பின்னடைவு.!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதில் காலை 10.30 மணி நிலவரப்படி, ஜோ பைடன் 223 சபை வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். டொனால்ட் டிரம்ப் 148 சபை வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார்.

அமெரிக்கா தேர்தலை பொறுத்தவரை மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெற்றால் தான் வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்பை விட 75 சபை வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்