US Election 2020 LIVE : “நிச்சயம் வெற்றி பெறுவோம் ” – ஜோ பைடன் நம்பிக்கை
தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வரும் வரை ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதனிடையே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அவரது உரையில்,தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வரும் வரை ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும். அதிபர் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.